• responsive slider

பெயர் : சிவ. இளங்கோ

பிறப்பு : 18.07.1936

பிறந்த இடம் : தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை.

தந்தை : திரு.சிவஞான கோவிந்தசுவாமி

தாய் : திருமதி கமலம் அம்மையார்

மனைவி : திருமதி சந்திரா

திருமண நாள் : 26.08.1962

உடன் பிறந்தவர்கள்:சிவ.மணவாளன் சிவ.கண்ணன், சிவ.அழகன் , டாக்டர் சிவ.நம்பி, சிவ.இளநகை, கனிமொழி கோவிந்தராஜன் , நிலவு ஜெகன்னாதன்

பிள்ளைகள் : இ.நல்லவன் - லட்சுமி பிரபா, இ.இனியவன்.ஹேமலதா, இ.அருள்மொழி - செங்குட்டுவன் , இ.தாமரை மதிவாணன்

இறப்பு : 12.05.1996

இளமைக்காலம்

ஆரம்பக்கால பள்ளிப் படிப்பு திருத்துறைப்பூண்டியில், அருகே உள்ள திருவாரூரின் கலைஞர் மு.க.,ராம. அரங்கண்ணல் ஆகியோரின் கொள்கைகளில் ஈரக்கப்பட்டார் . 1948ம் ஆண்டு 12 வயது மாணவன் சிவ.இளங்கோ திருத்துறைப்பூண்டி திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளராய், திராவிட மாணவர் கழக மாநாட்டை தொடக்கிவைத்தார் . மாநாட்டில் கலந்து கொண்டோர் திரு.கே.ஏ. மதியழகன் , என்.எஸ்.இளங்கோ போன்றோர் .1948 ஜூன் மாதம் இந்தி எதிர்ப்புபோரில் திருத்துறைப்பூண்டியில் மறியலில் ஈடுபட்டவர்களை சிவ. இளங்கோ குடும்பத்தார் தேனீர் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 1949ல் இருந்து பள்ளிப்படிப்பு பட்டுக்கோட்டையில் பள்ளியின் மாணவர் தலைவராக இலக்கிய விழாக்கள் பலவற்றை நடத்தினார். 1952 எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு. முடிந்தவுடன் விடுதலை ஆசிரியர் கி.வீரமணிவுடன் தமிழக முழுவதும் சுயமரியாதைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிவ.இளங்கோ-செயல்பாடுகள்:

    1952 - திருவையாறு அரசினர் கல்லூரியில் புலவர் பட்டம் பெறச் சேர்ந்தார். அவரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், சுயமரியாதை இயக்க உணர்வு போன்ற காரணங்களுக்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

    1953 - சென்னை வண்ணாரப்பேட்டையில் வரி எதிர்ப்புக் கூட்டத்தில் திருமதி சத்தியவாணிமுத்து, திரு.சி.பா. ஆதித்தனார் ஆகியோரோடு கலந்து, உரையாற்றினார்.

    1954 - அரசு ஊழியராக நில அளவுத் துறையில் வரைவாளராகப் பொறுப்பேற்றார்.

    1954 - அரசியலில் அண்ணா வழியை ஏற்றிட்டார் .

    1956 - ஏப்ரல் பட்டுக்கோட்டை தாலுக்கா N.G.O சங்க செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் N.G.O சங்கப் பணியில் அவர் பணி தொடர்ந்து தீவரமடைந்தது.

    1956 - பிரதமர் நேருவை சந்திக்கச் சென்ற மாநில N.G.O குழுவில் இடம் பெற்றார்.

    1957 - நில அளவுத் துறை வரைவாளர் மாநில சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்றார்.

    1959 - எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா குழுவின் பயிற்சியில் சேர்ந்தார் .

    1960 - கலைஞன் சினமா இதழின் பொறுப்பாசிரியர் .

    1961 - தி.மு.க வார ஏடான 'தாய்நாடு' இதழின் ஆசிரியர்.

    1962 - சிவ. இளங்கோ - சந்திரா திருமணம் நடைப்பெற்றது

    1962 - டாக்டர் கலைஞர் அழைப்பை ஏற்று முரசொலி நாளிதழில் துணை ஆசிரியர்.

    1963 - பட்டுக்கோட்டை அண்ணா படிப்பகத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவில் உரையாற்றியமைக்காக 18 மாதங்கள் வேலையில் இருந்து தற்காலிகப் பணிநீக்கம்.

    1964 - கோவை மாவட்ட N.G.O யூனியன் செயலாளர் .

    1965 - N.G.O யூனியனின் மாநிலத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1971 - N.G.O யூனியனின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,தொடர்ந்து 1994 வரை மாநிலத் தலைவராகத் தொண்டாற்றி சாதனை புரிந்தார்.

    1972 - சேலம்மாநாடு - சிவ. இளங்கோ தலைமையில் முதல்வர் டாக்டர் கலைஞர் உரையாற்றினார். டாக்டர் கலைஞர் இரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்து ' அரசு ஊழியர்களின் அடிமை விலங்கொடித்த ஆப்ரகாம் லிங்கன் கலைஞர் ' என்று N.G.O.க்களால் பாராட்டப்பெற்றார் சேலத்தில் கலைஞர், " பெயரிலேதான் இளங்கோ, குரலிலே செங்குட்டுவன் " எனப் பாராட்டியதை மறக்க முடியாது .

    1974 - தஞ்சையில் N.G.O சங்க மாநில மாநாடு சிவ. இளங்கோ தலைமையில் முதல்வர் டாக்டர் கலைஞர் பேருரை. பதவியில் இல்லாத போதும் டாக்டர் கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராய் இருந்தபோது வள்ளுவர் கோட்டத்தில் சிவ.இளங்கோ தலைமையில் மாநில மாநாட்டில் உரையாற்றினார்.

    1976 - வேலூரில் அரசு அலுவலர் மாநில மாநாடு.

    1977 - " இருபது அம்ச திட்டமும், அரசு ஊழியர் கடமையும் " என்ற புத்தகம் வெளியிட்டார்.

    1978 - அரசு அலுவலர் கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு தழுவிய மாபெரும் அறப்போராட்டம், சிறையில் அடைப்பு பின்பு முதல்வர் எம்.ஜி, ஆருடன் பேச்சு வார்த்தை.
" சிவ இளங்கோவை யாரும் விலைக்கு வாங்கி விட முடியாது "-எம்.ஜி.ஆர் பேச்சு.

    1979 - அரசு ஊழியர் ஓய்வுப் பெறும் வயதை 55லிருந்து 58ஆக உயர்த்தியது .

    1980 - மாதந்தோறும் மருத்துவப்படி பெற்றுத்தந்தது, மத்திய அரசு ஊதிய விகிதம்பெற்றுத் தந்தது, அரசு அலுவலர்களுக்கு போனஸ் பெற்றுத்தந்தது.

    1981 - அலுவலர் கோரிக்கைப் போராட்டத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    1984 - நில அளவுத் துறையில் பணியிழந்த ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களுக்கு பிற துறையில் பணியமர்த்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் போராடி வெற்றி பெற்றார்.

    1985 - P.S.I சார்பாக சிங்கப்பூர் மாநாட்டில் பங்குகொண்டார்.

    1986 - ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    1988 - 89 சென்னை மாநில மாநாடு.

    1990 - கலைஞர் தலைமையில் மாநில மாநாடு சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.

    1991 - இறந்த அரசு ஊழியர்களுக்கு 1974ல் 10,000மாக இருந்து உதவித் தொகை 91ல் ஒரு லட்சமாக உயர்த்தி சாதனை.

    31.7.94 அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார், இருந்தாலும் தொடர்ந்து அரசு ஊழியர் ஒன்றியத்தின் செயல் தலைவராக இருந்து இறுதிவரை ஆக்கப் பணியாற்றி வந்தார்.

சிவ. இளங்கோ - அரசு ஊழியர் நலம் காத்த பெருந்தகையாளர்

"சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்த சிவ. இளங்கோவிற்கு சமூக முன்னேற்றம் மற்றும் தமிழ்மொழி பற்று ஆகியவைகளில் ஆர்வம் இயல்பாகவே அமைந்திருந்தது.தந்தையார் பள்ளி ஆசிரியராக இருந்த காரணத்தால் கல்லூரியில் புலவர் பட்டத்திற்காக 1952-ல் சேர்ந்தார். அப்போது கல்லூரி நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவரது கல்லூரி சூழ்நிலை சமூக சூழ்நிலை ஆகியவை சமூகநீதிக்காக போராடும் போர்க்குணத்தை வளர்த்தது. இந்த போர்க்குணந்தான் பிற்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முதல்வர்களை பெருந்தலைவர் காமராசர் , திருபக்வத்சலம் , அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி , புரட்சி தலைவர் , புரட்சி தலைவி , ஆகியோர்களை எதிர்த்துப்போராடி வாதாடி அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்று தரமுடிந்தது . இந்த சாதனைக்கும் காரணம் இவர் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர் . பதவிக் கண்ணோட்டத்துடன் அரசு ஊழியர் ஒன்றியப்பணிகளை மேற்கொண்டது தான் அந்த தேவைக்கு அரசுப்பணிதான் நடுதரவர்க்கதினர்க்கும், பிற்பட்டோர்க்கும், தாழ்த்தப்பட்டோர்க்கும் உரிய சமூக அந்தஸ்து வருவாய் , அரசு செயல்பாடுகளில் பங்கேற்பு ஆகியவற்றைப் பெற வழிக்கோலும் என உறுதியாக நம்பினார் . எனவே அரசுப் பணியில் சேர்ந்தார். நில அளவிடுத்துறையில் வரைவாளராக சேர்ந்தார். அது அவரை அரசு ஊழியர் சங்கத்திற்கு கொண்டு போய்சேர்த்தது . 1954ல் 18 வயதில் உள்ள இளமைத்துடிப்பு, போராடும் புலிக்குணம் தமிழ்பற்று , சமூக முன்னனேற்றத்தில் ஈடுபாடு , அரசு ஊழியர் சங்க நடவடிக்கைகளில் கொண்ட தீவிர ஈடுபாடு ஆகியவை இவரை 1970-ல் தொடங்கிய தலைவர் பணி அவரது இறுதிக் காலம் வரை 12.5.1996 வரை தொடர்ந்தது.மரணந்தான் அவரை அரசு ஒன்றியத்திலிருந்து பிரித்தது .

இவரது தலைவர் பதவி காலத்தில் செய்த பணிகள் சிலவற்றை காண்போம் .

   அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்புத் திட்டம்.


   அடிமை விலங்காம் ரகசிய குறிப்பேட்டு முறை ஒழிப்பு.


   ஐந்து ஊழியக்குழுக்கள் மற்றும் மூன்று ஊதிய விகித முரண்பாடுகளையும் குழுக்கள் அமைக்கப் பாடுபட்டார்.


   அரசு ஊழியர் பிள்ளைகட்கு வேலை வாய்ப்பு துறையில் பதியு செய்யாமல் பணியில் சேர்த்தல்.மத்திய அரசு அலுவலர்களுக்கு இனணயாக

      மாநில அரசு அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை பெற்று தருதல் .


   வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத்திட்டம் அமுல் ( 1984 , 1990) .


   புரட்சித்தலைவர் ஆட்சியில் ஓய்வு பெரும் வயதை 55லிருந்து 58 ஆக உயர்த்தி ஆணை பெற்றார் .


   பத்துக்கும் மேற்பட்ட மாநில மாநாடுகளை நடத்தி பல கோரிக்கைகளை வென்றார் .


    1978- 1979- 1982-ல் அரசு ஊழியர் போரட்டங்களை முன்னின்று நடத்தினர்.


    புரட்சித்தலைவி ஆட்சியில் 1991ல் அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்கான தொகை ரூ 60,000 ஆக உயர்த்தப்பட்டது.


இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்:

திரு சிவ. இளங்கோ 1996மே 12ம் தேதி விடியற்காலை திடீர் மாரடைப்பால் காலமானார் . மறைந்து விட்ட போதிலும் அவர் நினைவாக நம்முன் இருக்கின்ற சாட்சியங்கள் அவர் நினைவைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன. திரு சிவ. இளங்கோ அவர்களின் பெருமுயற்சியில் கலைஞர் அவர்களின் ஆசியோடு உறுப் பெற்றதுதான் அரசு அலுவலரகுடியிருக்கும் பெரியார் நகர். அந்தப் பெரியார் நகரின் சாலைக்கு சிவ. இளங்கோ சாலை என்று பெயரிட்டு பெருமை சேர்த்தார் டாக்டர். கலைஞர் அவர்கள் . சிவ. இளங்கோ நகர் சில ஊர்களில் அமையப்பெற்றுள்ளது. மதுரையில் ஓர் அரசு ஊழியர் தான் நடத்தும் டிராவல்ஸ்க்கு சிவ. இளங்கோ டிராவல்ஸ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். சிவ. இளங்கோ நினைவாக அவரின் பூர்வீக கிராமமான மன்னை , மகாதேவப் பட்டினத்தில் சிவ. இளங்கோ நூலகம் பலரும் பயனடையும் வகையில் விளங்குகிறது. இப்போது சிவ. இளங்கோ நினைவாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு பல சமூகப் பணிகளை ஆற்ற வழி வகுக்கிறது.